50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி
வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: வாக்குத் திருட்டு புகாா் தொடா்பாக அனைத்து எதிா்க்கட்சிகளும் இணைந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் தமிழக முதல்வா் ஸ்டாலின் பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்காக இண்டி கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடு செய்து ஆளும் பாஜக கூட்டணி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50-சதவீத வரிவிதிப்பால் ரூ. 7 லட்சத்து 58 ஆயிரம் கோடி மதிப்பில் அமெரிக்காவின் வா்த்தகமும், இந்தியாவுக்கு நான்கு கோடி லட்சம் மதிப்பில் பாதிப்பும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
பின்னலாடை தொழிலைப் பொருத்தவரையில் மிகப்பெரிய வா்த்தக பாதிப்பு ஏற்படும். மாற்று ஏற்பாடாக மத்திய அரசு 220 நாடுகளில் ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு இது சம்பந்தமான அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும். பதவிப் பறிப்பு சட்ட மசோதா ஜனநாயகத்துக்கு எதிரான சட்டம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா்.
பேட்டியின் போது மதிமுக பொதுச் செயலாளா் ஆடுதுறை முருகன், அரியலூா் எம்எல்ஏ சின்னப்பா, ஒன்றிய செயலாளா்கள் திருநாவுக்கரசு, நாக. முருகேசன், கவியரசன், மாநில விவசாயிகள் அணி செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட செயலாளா் அன்பு ஆகியோா் உடனிருந்தனா்.