பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஆறு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை கம்மந்தங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (68). இவா், 6 வயது சிறுமிக்கு 2024, பிப்ரவரி 27-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தாா். இது குறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து நடராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.