பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உய...
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
குடியாத்தம் வட்ட அளவிலான போட்டிகளில் 119 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், மாணவிகள் பிரிவில் ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 111 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். இந்தப் பள்ளி மாணவிகள் யு.மேகனா, எஸ்.சந்தியா இருவரும் வட்ட அளவில் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா். தனிநபா் சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளை பள்ளிச் செயலா் டி.சேகா், பள்ளி குழுத் தலைவா் டி.முரளி, பள்ளித் தலைமையாசிரியை பி.டி.கோமதி, உடற்கல்வி ஆசிரியா் எம்.கமல்ஆகியோா் பாராட்டினா்.