செய்திகள் :

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை - யார் இவர்?

post image

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல்.

சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆளும் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த அஹ்மத் அல்-ரஹாவி கொல்லப்பட்டுள்ளார் என ஹௌதிக்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹௌதியின் உயர்மட்ட தலைவர் இவர்.

கடந்த வியாழன் அன்று ஏமன் தலைநகர் சனாவில் நடந்த தாக்குதலில் அஹ்மத் அல்-ரஹாவி உடன் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹௌதி வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

அஹ்மத் அல்-ரஹாவி

கிளர்ச்சிக் குழுவின் ரகசியத் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி பேசிய உரை, காசாவின் நிலை மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள அவர்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அப்துல் மாலிக் அல்-ஹவுதி, அமைப்பின் யுத்திகள், கொள்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் தலைவர். பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி சனா மற்றும் ஹௌதியின் பிற பகுதிகளில் மக்களின் குடிமை பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் முன்னணி வகிக்கும் தலைவர் அல்ல என்றாலும், இவரது மறைவு அமைப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழன் (ஆகஸ்ட் 27) அன்று, சனாவின் தெற்கு பகுதியில் உள்ள பழமையான கிராமத்தில் ஹௌதி தலைவர்கள் சந்திப்பு நடத்தியபோது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

அவரது இறப்பைத் தொடர்ந்து துணை பிரதமர் முத்தஹம்மத் அஹ்மத் மிஃப்தா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாட்டுக்கறி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்... மேலும் பார்க்க

சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்' - விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.450 பக்கங்கள் கொண... மேலும் பார்க்க

``947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்..."- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை... மேலும் பார்க்க

Modi: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - பின்னணி என்ன?

2022-ம் ஆண்டு உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷ்யாவை இந்தியா வெளிப்படையாக விமர்சித்ததில்லை. ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானங்களில் இந்தியா வாக்களிப்பதிலிருந... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் 947 Voters - Thanos -க்கு Voter ID? - RTI கேள்விக்கு பதிலளிக்காத ECI | Imperfect Show

* இந்தியாவில் ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு?* உலக பொருளாதாரம் உறுதி தன்மைக்கு சீனா- இந்தியா இணைந்து பணியாற்றுவது அவசியம்? - மோடி * மோடியால் ஜப்பானில் பாதுகாப்பாக இருக்கிறோம் - கருத்து சொன்ன பெண்* அதிப... மேலும் பார்க்க