செய்திகள் :

FMI MiniGP: ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது உலகக்கோப்பை தான் - அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

post image

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FMI மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார்.

சென்னையில் பிறந்த ஜேடன் பெற்றோருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ரேஸில் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது தந்தை.

Jaden Immanuel
Jaden Immanuel
Jaden Immanuel
அஜித்துடன் ஜேடன்

மோட்டார் பைக் ரேஸ்களில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய ஜேடன், 10 வயது முதல் FMI MiniGP ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்றுவருகிறார். பல்வேறு போட்டிகளில் வென்றிருக்கிறார்.

FMI MiniGP என்பது MotoGP-ல் பங்கேற்க விரும்பும் இளம் வீரர்களுக்கான களம். இதில் 160 cc பிரிவில் 10-14 வயதினரும், 190cc பிரிவில் 12-16 வயதினரும் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறும். ஜேடன் 190cc பிரிவில் சாதித்து வருகிறார்.

வெளிநாடுகளில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கு இளம் இந்திய வீரரான ஜேடன், பல்வேறு அமைப்புகள், க்ளப்கள், ஸ்பான்ஸர்ஷிப் மூலம் உலகத்தர பயிற்சிகள் பெற்றுவரும் சர்வதேச வீரர்களை பின்னக்குத்தள்ளி 2025 FMI MiniGP ஜெர்மனி ரேஸில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Jaden Immanuel
Jaden Immanuel
Jaden Immanuel

ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்ற MiniGP பந்தயங்களில் முதல் மூன்று இடம் பிடிக்கும் வீரர்கள், சீசனின் இறுதியில் நடக்கும் உலக அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.

அந்த வகையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு ஸ்பெயினில் நடக்கவிருக்கும் போட்டியில் களமிறங்குகிறார் ஜேடன். அதற்கு அஜித் குமாரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

13 வயது சிறுவனான ஜேடன் இந்த வெற்றிக்காக பலமுறை சர்கியூட்டில் சருக்கியிருக்கிறார். இந்தியாவை முன்னிறுத்தி பைக் ஓட்டி வெல்ல வேண்டும் என்ற ஆசையும், பெற்றோரின் ஆதரவும் ஒவ்வொருமுறையும் அவரை மீண்டும் எழ வைக்கிறது. சீறிப்பாயும் சிறுவன் ஸ்பெயினில் வெற்றிபெற வாழ்த்துகள்!

Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!

மனித பரிமாணத்தின் பகுதியாகவே சமூக கட்டமைப்பு உருவாகிறது. நாகரிகங்களின் தொடக்கம் முதல் இந்த கட்டமைப்பு பல்வேறு நிலைகளில், பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான பொறுப்புகள் ஒவ்... மேலும் பார்க்க

Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக தோல் ப... மேலும் பார்க்க

Lionel Messi: `கேரளா வருகிறார் லியோனல் மெஸ்ஸி' - உறுதியான தகவல்... உற்சாகமான ரசிகர்கள்!

கேரள மாநிலத்தில் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும்போது கேரளா மாநிலம் முழுவதும் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து திருவிழா போன்று களைக்கட்ட ... மேலும் பார்க்க

"சச்சின் என் சகோதரரை விட பெரியவர் எனவும் கூற முடியாது!"- வினோத் காம்ப்ளியின் சகோதரர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இப்போது அவர் மும்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் இருப்பதாகவும், அங்கு அவர் குணமடைந்து வருவதாகவும் சொல்கிறார... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் ! பத்திரிக்கையாளர் சந்திப்பு !

30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இ... மேலும் பார்க்க