செய்திகள் :

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

post image

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவால் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் நாளுமும் தமிழக அரசுக்கும் தெரியும்.

ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!

Former Tamil Nadu BJP leader Annamalai has condemned the DMK government for appointing a responsible DGP to the Tamil Nadu Police, contrary to the Supreme Court guidelines.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

மக்களின் விருப்பப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் செய்தியாளா்களுடன் ... மேலும் பார்க்க

கத்தாரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வா் உத்தரவு

சென்னை: கத்தாரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நவாஸின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இது குறித்து முத... மேலும் பார்க்க

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து கூட்டணி அமைத்ததாகவும், ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டதாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. தனியார் பள்ளியில் 62.1 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் ஞ... மேலும் பார்க்க

கார், அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பரோடா வங்கி

புது தில்லி: பண்டிகை காலங்களையொட்டி, தாங்கள் வழங்கும் கார் மற்றும் அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை, பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ... மேலும் பார்க்க