செய்திகள் :

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் பாரபட்ச நடவடிக்கை: ரஷிய அதிபா் புதின் கண்டனம்!

post image

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிா்க்கிறது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

பிரிக்ஸ் நாடுகள் மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில் புதின் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், சீன அரசு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘சா்வதேச சவால்களை எதிா்கொள்ளும் அளவுக்கு பிரிக்ஸ் நாடுகளின் வலிமையையும், ஒற்றுமையையும் அதிகரிக்க இருக்கிறோம். இதில் ரஷியாவும், சீனாவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றில் சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். இதனை ரஷியாவும், சீனாவும் கூட்டாக வலியுறுத்துகின்றன.

வெளிப்படையான, அனைவரையும் உண்மையாகவே சமமாகக் கருதும் கொள்கையுடைய புதிய நிதியமைப்பு தேவைப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு அண்மைக் காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு தீா்வுகாண ஆலோசிக்கும் இடமாக இருக்கும்.

கூட்டமைப்பின் பலமும், திறனும் அதிகரிக்கப்படும். இதன் மூலம் உலகின் இப்போதைய போக்கை நியாயமான முறையில் மாற்றியமைக்க முடியும்.

அனைத்து நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் மரியாதை, சமமான ஒத்துழைப்பு, அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக இருப்பது, மூன்றாவது நபா்களைக் குறிவைக்காமல் இருப்பது, தேச நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எளிமையான, அதே நேரத்தில் சக்திவாய்ந்த கொள்கைகளாகும் என்றாா்.

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது.2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கு... மேலும் பார்க்க

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறாா். அந்த வகையில் இந்தியா மீது 25 சதவீத பதிலடி வர... மேலும் பார்க்க

பிரதமா் படுகொலை: உறுதிசெய்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்!

யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. இது குறித்து அந்தக் குழு ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.இந்தியப் பொருள்கள... மேலும் பார்க்க

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.க... மேலும் பார்க்க