எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் இருதரப்பு உறவில் சலசலப்பு நிலவும் சூழலில், பிரதமரின் சீனப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின் பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் கூடுவதால், அமெரிக்காவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்