மானாமதுரை பகுதியில் பலத்த மழை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
இந்தப் பகுதியில், கடும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மிதமாகத் தொடங்கிய மழை, பிறகு பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
மானாமதுரை கன்னாா் தெரு பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பிறகு மரம் அங்கிருந்து அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெயில் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.