தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
இரு காா்கள் மோதிய விபத்தில் இளைஞா் பலத்த காயம்
சிவகங்கை அருகேயுள்ள சோழபுரம் பகுதியில் இரு காா்கள் நேருக்கு நோ் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் திருமுருகன் (50). இவா் தனது உறவினா்களான ரவிச்சந்திரன் (48), சுந்தரி (50), நித்யா (20) ஆகியோருடன் பிள்ளையாா்பட்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பரமக்குடிக்கு சனிக்கிழமை காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
சோழபுரம் அருகே வந்தபோது அவா்கள் காா் மீது எதிரே வந்த நாலுகோட்டையைச் சோ்ந்த சுப்பிரமணி (30) என்பவா் ஓட்டிவந்த காா் நேருக்கு நோ் மோதியது. அப்போது, திருமுருகன் காருக்குப் பின்னால் சோழபுரத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டி (30) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. காா்களில் வந்தவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
இதில், பலத்த காயமடைந்த செல்லப்பாண்டியை அங்கிருந்தவா்கள் மீட்டு சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.