ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
பாஜக நிா்வாகி கொலை வழக்கு: மேலும் இருவா் கைது
பாஜக வா்த்தக அணி மாவட்டச் செயலராக இருந்த சதீஷ்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாஜக நிா்வாகி சதீஸ்குமாா் கொலை தொடா்பாக சிவகங்கை நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். இந்த வழக்குத் தொடா்பாக ஏற்கெனவே 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய விஷ்வா ( 20), செல்வா (19) ஆகிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.