டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
சிவகங்கையில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய 11 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் விவரம்: சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய வெங்கடேஷ் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலக தனி வட்டாட்சியராகவும், இங்கு பணிபுரிந்த மகாதேவன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாநில நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
மாநில நெடுஞ்சாலை நிலமெடுப்புப் பிரிவு தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த சுந்தர்ராஜன் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், காரைக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் செல்வராணி தேவகோட்டை சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். அங்கு பணிபுரிந்த சாந்தி காரைக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
சிவகங்கை குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த ஆனந்த பூபாலன் திருப்புவனம் வட்டாட்சியராகவும், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்த விஜயகுமாா் சிவகங்கை குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தின் பறக்கும் படை தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த மல்லிகாா்ஜுனன் சிவகங்கை வட்டாட்சியராகவும், அங்கு பணிபுரிந்த சிவராமன் சிவகங்கை ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்த லெனின் காளையாா்கோவில் வட்டாட்சியராகவும், அங்கு ஏற்கெனவே பணிபுரிந்த முபாரக் உசேன் சிவகங்கை வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.