செய்திகள் :

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

post image

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந்து வருகிறது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அருகே உள்ள சங்கிலி கரடு பகுதியில், மகளிர் சுயஉதவிக் குழுவின் பெயரில் கல்குவாரி அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வந்தது. பெயர்தான் மகளிர் சுயஉதவிக் குழு. ஆனால் வெட்டி எடுத்ததோ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள். மலையை வெட்டி எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த கம்பம் நகரச் செயலாளர் சதீஷ்குமார் என்ற சசியை ஆகஸ்ட் 25-ம் தேதி சமரசம் செய்ய அழைத்த கல்குவாரி தரப்பினர், குத்திக' கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யபட்ட சதிஷ்குமார்

கல் குவாரி தடையாணை

‘இந்தக் கனிம வளக் கொள்ளை, கொலைக்குப் பின்னால், பல முக்கியப் புள்ளிகள் இருக்கின்றனர்’ என்று பகீர் குண்டு போடும் தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டத் தலைவர் ராஜ்குமார், “சங்கிலி கரடு கல் குவாரியில் அனுபவ பாத்தியக்காரர்களுக்கும், மகளிர் குழுக்களுக்கும் மட்டுமே பாஸ் கொடுத்து கல்லை வெட்டி எடுக்க அனுமதி கொடுத்திருக்கிறது வருவாய்த்துறை. அந்தவகையில் குவாரியை ஆறு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு குழுவினரும் வெட்டி எடுத்து வந்துள்ளனர். முதல் பாகத்தின் அனுபவ பாத்தியக்காரரான சசியின் குடும்பத்தினர், மலையில் கல் உடைத்து விற்பனை செய்துள்ளனர். 2012 காலகட்டத்தில் கல்குவாரியால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பக்கத்தில் இருந்த திராட்சை தோட்டத்துக்காரர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கல்குவாரி தரப்பினரை ஒன்றுசேர்த்த தி.மு.க பிரமுகர் குரு இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர், அந்த திராட்சை தோட்டத்தை விலைக்கு வாங்கி, வழக்கின் முக்கிய சாட்சியை சமரசத்துக்குக் கொண்டு வந்து பிரச்னையை முடித்தார்கள். கடந்த 2022ல் திரும்பவும் குவாரியை நடத்துவதற்கு அனுமதியும் வாங்கினார்கள். இந்த வழக்குக்காக பல கோடி ரூபாய் செலவானதாகக் கூறி, தனக்குத் தெரிந்த மகளிர் குழுக்களை குவாரியை ஏலத்தில் எடுக்க வைத்து, அவர்களுக்கு மாதம் 2000 ரூபாயும், அனுபவ பாத்தியக்காரர்களுக்கு 100 மீட்டருக்கு மாதம் 10,000 ரூபாயும் கொடுத்து வெளியேற்றிவிட்டு, குவாரி முழுவதையும் குரு இளங்கோவன், ராஜேந்திரன், கெளரி தரப்பினரே கைப்பற்றினர். கேரளாவில் கனிம வளங்களை எடுப்பதற்கு தடை உள்ள நிலையில், குரு இளங்கோவன் தரப்பினர் அங்கிருப்பவர்களிடம் டீல் பேசி கற்களை அனுப்பி வந்தனர்

தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார்

மலையை வெட்டும் கேரளவாசிகள்

இதில், நேரடியாக மலையை வெட்டி எடுப்பது, வண்டிகளில் கொண்டு செல்வது எல்லாமே கேரளாவைச் சேர்ந்தவர்களே. ஒரு நாளைக்கு பத்து வண்டிகள் கல் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அரசின் அனுமதியை மீறி 50-லிருந்து 100 லாரிகள் வரை செல்கின்றன. கல்லை வெட்டி எடுக்க ஆட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் காற்றில் பறக்கவிட்டு, இங்கு பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் கற்களை வெட்டி எடுக்கிறார்கள். கனிம வளம் கேரளாவிற்குச் செல்வதைத் தடுக்குமாறு எங்கள் கட்சியின் சார்பாக பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சசியைக் கொலை செய்துள்ளது குரு இளங்கோவன் தரப்பு” என்றார் விரிவாக.

சங்கிலிகரடு கல்குவாரி

இது குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தபோது, “கடந்த இரண்டு மாதங்களாகத்தான் குவாரி செயல்படத் தொடங்கியிருக்கிறது. தொடங்கும்போதே, `வெளியேற்றிய அனுபவ பாத்தியக்காரர்களை சேர்த்துக்கொண்டு, எங்களுக்கும் கல்லை வெட்டி எடுக்க அனுமதி வேண்டும்’ என பிரச்னை செய்துள்ளார் சசி. இரு தரப்பிற்கும் பிரச்னையாகி பிரிந்துவிட, அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, தொடர்ந்து கற்களை வெட்டி எடுத்து கேரளாவிற்கு அனுப்பிக் கொண்டிருந்துள்ளது குரு இளங்கோவன் தரப்பு.

புதுகோட்டை கம்பெனி!

இதற்கிடையில் புதுக்கோட்டை கம்பெனி தேனி, திண்டுக்கல் பகுதிகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. கம்பம், குமுளி செக் போஸ்ட்டுகள் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம் 1500 ரூபாய் வரை வசூல் செய்கிறது இந்தக் கம்பெனி. இதனையெல்லாம் சொல்லி மக்களைத் திரட்டி பிரச்னை செய்கிறார் என்பதால், சசியை சரிப்படுத்தவே பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அங்கு வாக்குவாதம் முற்றவே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை சரியான கோணத்தில் விசாரித்தால், பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள்” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சசி உறவினர்கள்

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாரிடம் பேசியபோது, ``கொலை சம்பவம் தொடர்பாக பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி, குரு இளங்கோவன், ராஜேந்திரன், ராஜாமணி, மணிமாறன், பாலமுருகன், அமைதி என்ற பிரபு ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும் கௌரி, செல்லத்துரை, திருமலை நம்பி ஆகியோரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

மலையை வெட்டியெடுக்கவே இவ்வளவு போட்டிகளும் கொலைகளும்!

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் கொள்ளையடித்த 3 பேர்; 24 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

விருதுநகர் வ.உசி தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி நாகராணி (48) ஓ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று பைக்கில் பள்ளிக்குச்... மேலும் பார்க்க

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா...' - மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பே... மேலும் பார்க்க

``ரூ.232 கோடி மோசடி'' - இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி ராகுல் விஜய் கைது; CBI நடவடிக்கை

மத்திய புலனாய்வு காவலர்கள் (CBI), ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.AAI சார்பில் ராகுல் விஜய் என்ற அதிகாரிக்கு எதிராக புகார் ... மேலும் பார்க்க

Microsoft அலுவலகத்திலேயே மரணமடைந்த இந்திய ஊழியர் – விலகாத மர்மம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில் இந்திய ஊழியர் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.பிரதிக்... மேலும் பார்க்க

US: நடுரோட்டில் `கட்கா' வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; சுட்டுக்கொன்ற போலீசார் – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங். சுமார் 35 வயதான இவர், பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் பா... மேலும் பார்க்க