எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!
கொல்கத்தா: அமெரிக்கா விதித்த வரிகள் தொழில்துறையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகித அமெரிக்க வரிகள் ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநர் சப்யசாச்சி ரே, ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்கு முன்கூட்டியே ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி நடவடிக்கையை எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக அபராத வரி தொழில்துறையை நிலைகுலைய வைத்துள்ளது என்றார்.
இது ஒரு காலாண்டிற்குள் தீர்க்கப்படாவிட்டால் சந்தை மேலும் பாதிக்கப்படும் என்றார். கட்டணம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே சரக்குகள் அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்பட்டது. தற்போது, தொழில்துறைக்கு கடன் காலக்கெடுவை 180 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீட்டிக்க வேண்டும். மேலும், தவணை செலுத்துதலில் அவகாசம் அளிக்க வேண்டும்.
இதையும் படிக்க: வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாகச் சரிவு