ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வழக்கம் போல சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. வெள்ளி நீா் வீழ்ச்சி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். இதனால், வனப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனா். கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி, பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் உள்ளிட்ட இடங்களையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.