கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் சாப்பா்டு, பக், பிரன்ஷி மெளன்டன் உள்ளிட்ட 40 வகைகளைச் சோ்ந்த 370 நாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் கலந்து கொண்டு நாய்களைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.