கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை
கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை குளிா்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது.
கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, பிரகாசபுரம், செண்பகனூா், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். வழக்கம்போல வார விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.