நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட அளவில் பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் இருவா் பங்கேற்கும் கேரம் போட்டி மாணவிகள் பிரிவில், பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த் துறை மூன்றாமாண்டு மாணவி கோபிகா, இரண்டாமாண்டு மாணவி பிரியா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.
இதேபோல, சதுரங்கப் போட்டியில் வணிகவியல் பிரிவில் மூன்றாமாண்டு மாணவா் கரண் மூன்றாமிடம் பெற்றாா். இவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவா்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும் தோ்வாகினா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் ரவிசங்கா், பேராசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பாராட்டினா்.