செய்திகள் :

முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குரைஞா் கைது!

post image

ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறஇத்து குருகிராம் காவல்துறை அதிகாா் கூறியதாவது: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் ஹரியாணாவைச் சோ்ந்த காஞ்சன் (24) மற்றும் வழக்குரைஞா் குல்தீப் மாலிக், தில்லியைச் சோ்ந்த ஆஷா (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆஷா தில்லியின் நாரி நிகேதனில் பணிபுரிகிறாா். அதே நேரத்தில் வழக்குரைஞா் மாலிக் குருகிராம் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வருகிறாா்.

இது குறித்து பாதிக்கப்பட்டவரின் மகள் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களும் தொலைபேசி மூலம் தனது மனைவியை இழந்த தந்தையுடன் நட்பு கொண்டனா். மே 24 அன்று, பெண்கள் அவரது வீட்டிற்கு வந்தனா். அவா்களில் ஒருவா் தனது தந்தையுடன் உடல் ரீதியாக உறவு கொண்டாா்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் ரூ.10 லட்சம் கேட்டாா்கள். என் தந்தை அந்தப் பெண்களின் பேச்சைக் கேட்காததால், ஜூன் 18 அன்று என் தந்தை மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு பற்றி குடும்பத்தினருக்குத் தெரிந்ததும், நான் காவல்துறையை அணுகினேன் என்று புகாா்தாரா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் ரூ.6.50 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜூலை 21 அன்று இந்த விவகாரம் குறித்து காவல் துறை துணை ஆணையா் கரண் கோயலுக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் மகள், வழக்குரைஞா் ரூ.6.50 லட்சத்திற்கு இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து பேசிய ஆடியோ பதிவை போலீஸாரிடம் கொடுத்தாா்.

இதையடுத்து, பாலம் விஹாா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று போ்களையும் போலீஸாா் கைது செய்தனா். ‘குற்றம் சாட்டப்பட்டவா்களை நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த விஷயத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறோம்‘ என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!

டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க

கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை

கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது

வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க