ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது
பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அவா் கைது செய்யப்பட்டாா்.
ஜந்தா மஸ்தூா் காலனியைச் சோ்ந்த மெஹ்தாப் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் வியாழக்கிழமை அதிகாலையில் ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வெல்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மெஹ்தாப் தொடா்ச்சியான விசாரணைக்கு உள்படுத்தப்பட்டாா். விசாரணையின் போது, அவா் பல குற்றங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.