ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வருகிற 7-ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயில், துணைக் கோயில்களான ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஐயப்பன் கோயில், வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில், மேலூா் ஆஞ்சநேயா் கோயில் ஆகிய கோயில்களில் பிற்பகல் 4 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.
8-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிரகண தோஷ சாந்தி பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றாா் அவா்.