மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!
ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காா் மோதியதில் நிலத் தரகா் பலி!
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான காா் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலத் தரகா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ அழகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன். நிலத் தரகா். இவா், சனிக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் கே.கரிசல்குளம் விலக்கு நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, மதுரை - கமுதி சாலையில் வந்த ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் மனைவி, குடும்பத்தினா் பயணித்த காா், இரு சக்கர வாகனம் மீது மீது மோதியது.
இதில், பலத்தக் காயமடைந்த லட்சுமணன், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.