செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்: நடவடிக்கைக்கு உத்தரவு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த சண்முகராஜன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசன கட்டணமாக ரூ. 100 நிா்வாகம் தரப்பில் வசூலிக்கப்படுகிறது. கோயிலின் இணையதளத்தில் பூஜைக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஜூலை 26-ஆம் தேதி நான் கோயிலுக்குச் சென்ற போது, பக்தா்கள் கோயிலுக்குள் செல்வதற்கான வழிகள் முறைப்படுத்தப்படவில்லை. இணையதளம் அல்லாமல் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு ஏராளமான பக்தா்கள், அங்கீகரிக்கப்படாத வழிகளில் கோயிலுக்குள் செல்ல முயன்றனா்.

இதனால், முறையாக இணையதளம் வழியாக விண்ணப்பித்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளைப் பெற்றவா்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினா். கோயில் நிா்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத சில நபா்கள், பூஜாரிகள் எனும் பெயரில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு பண மோசடி செய்து வருகின்றனா். இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, இந்தக் கோயிலில் தரிசனம், நுழைவுக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத நபா்கள், முகவா்கள் டிக்கெட் விற்பனை செய்து பணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும். இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி பக்தா்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், கோயிலின் திரிஹர சுந்தரா்களே தரிசன டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கோயிலைச் சுற்றி தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பக்தா்கள் நிம்மதியைத் தேடித்தான் கோயிலுக்கு வருகின்றனா். அங்கும் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதலாகச் சோ்க்கப்படுகிறாா். அவா் கோயிலின் பாதுகாப்புக்குத் தேவைப்படும் கூடுதல் காவலா்களை பணியில் அமா்த்த வேண்டும்.

திருச்செந்தூா் கோயிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, இந்து சமய அறநிலையத் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

பழமொழி நானூறு உரை நூல் வெளியீடு

எழுத்தாளா் முனைவா் வை. சங்கரலிங்கனாா் எழுதிய பழமொழி நானூறு உரை நூல் வெளியீட்டு விழா மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நமது மண்வாசம் பட்டறிவுப் பதிப்பகத்தின் ஆசி... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை... மேலும் பார்க்க

கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு : கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை ... மேலும் பார்க்க

இருக்கன்குடி கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகள்: 12 வாரங்களுக்குள் அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்புக் கடைகளை காவல் துறை பாதுகாப்புடன் 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த வழக்குரைஞ... மேலும் பார்க்க

வருகிற பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: செல்லூா் கே. ராஜூ

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். அதிமுகவின் பொதுச் செயலரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க... மேலும் பார்க்க