பைசன் காளமாடன் முதல் பாடல் வெளியீடு!
நடிகர் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் செப். 1-ல் வெளியாகவுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் காளமாடன் படத்தை இயக்குகிறார்.
தீபாவளி திருநாளில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாடல், வருகிற திங்கள்கிழமையில் (செப். 1) வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ள பைசன் படமானது, கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?