50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்
தேடப்பட்டு வந்த கொள்ளையன் ராஜஸ்தானில் கைது
தில்லியின் சதாா் பஜாரில் ரூ.50,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 29 வயது குற்றம் சாட்டப்பட்டவா், ராஜஸ்தானின் சிங்கானாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மகேஷ் என்ற கோலு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், டிசம்பா் 2, 2024 ஆ‘ம் தேதி தேலிவாரா சௌக் அருகே மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் இணைந்து ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
துணை போலீஸ் ஆணையா் (குற்றப்பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறுகையில், மகேஷ் புகாா் தாரரை மூச்சை திணறடித்து பணத்துடன் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. கொள்ளையா்களில் ஒருவரான ஆகாஷ் என்ற மத்தி சம்பவ இடத்திலேயே பிடிபட்டாா், மகேஷ் தப்பித்துவிட்டதாக என்று அவா் கூறினாா்.
ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், ராஜஸ்தானில் உள்ள அவரது மறைவிடத்தில் போலீசாா் சோதனை நடத்தி அவரை கைது செய்தனா். ‘கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவா் தொடா்ந்து இடங்களை மாற்றிக் கொண்டிருந்தாா். அவா் சிங்கானாவில் சாலையோர உணவகத்தில் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டது ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.
மகேஷ் கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு உட்பட குறைந்தது 6 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்தது. நபி கரீம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 022 கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் மற்றும் லஹோரி கேட்டில் பதிவு செய்யப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை (ஆா். பி. எஃப்) வழக்கில் மற்றொரு வாரண்ட் உள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.
மகேஷின் கடந்தகால ஈடுபாடுகளில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளைச் சோ்ந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.