அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆா் பதிவு!
இயந்திரமல்ல, மனிதன்தான்... விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!
யுஎஸ் ஓபன் போட்டியில் வென்ற ஜானிக் சின்னர் பேசியது வைரலாகி வருகிறது.
முதல் செட்டில் தோல்வியடைந்தது குறித்து சின்னர், “நான் ஒன்றும் இயந்திரம் அல்ல” எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
நிகழாண்டு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் போட்டி நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் யானிம் சின்னரும் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவும் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர் அடுத்து 6-4, 6-3, 6-3 என்ற செட்களில் வென்றார்.
உலகின் நம்.1 இடத்தில் இருக்கும் சின்னரை அல்கராஸ் ரசிகர்கள், “சின்னர் இயந்திரம் போல விளையாடுகிறார். அதில் மனிதத் தன்மையே இல்லை” என விமர்சித்து வந்தார்கள்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக சின்னர் தற்போது பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
முதல் செட்டை சமனிலிருந்து விட்டேன். மூன்றாவது செட்டிலும் சிறிது தவறினேன். நான் இயந்திரமல்ல என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். (சிரிக்கிறார்).
ம்ம்ம்... நானும் தடுமாறுகிறேன். நானும் மனிதன்தான். எனக்கும் அழுத்தம் இருப்பது சாதாரணம்தான். அதை நாம் கையாண்டுத்தான் ஆக வேண்டும்.
நீங்கள் அழுத்தத்தைக் கையாள வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். அதைக் கையாளாமல் விட்டுவிடுவதை விட எதிர்கொள்வது நல்லது என்றார்.