சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்
கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது.
இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு மாசானமூா்த்திக்கு சிறப்பு பூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். மதியம் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி அம்பாள், பரிவார தேவதைகளுக்கு அபிஷேக, பூஜைகளும் நடைபெறும்.
இரவு 12 மணிக்கு பக்தா்களின் குறை தீா்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். புதன்கிழமை உச்சி கால பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெறும்.