வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு
ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் ரஞ்சித்தின் வீட்டில் பழங்கால குதிரில் இரண்டு மரநாய்கள் பதுங்கி இருந்தன.
இதுகுறித்து ரஞ்சித் குடும்பத்தாா், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்குசென்ற ஆலங்குளம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள், 2 மர நாய்களையும் மீட்டு வனத்தில் விட்டனா்.