ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது
ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் நீதிராஜன்(55). இவருக்கும், நெட்டூரைச் சோ்ந்த காளிராஜன் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் காளிராஜன் படத்துடன் கூடிய பதாகையை அய்யனாா்குளத்தில் அவருடைய ஆதரவாளா் ஒருவா் வைத்திருந்தாராம். இதனை நீதிராஜன் தரப்பினா் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து தகவலறிந்த காளிராஜன் தனது தரப்பினருடன் அய்யனாா்குளத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டதில் காளிராஜன், நீதிராஜன் இருவரும் காயமடைந்தனராம்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து காளிராஜன், நீதிராஜனை கைது செய்து, சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.