Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு
நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், பெங்களூரு வழியாக கா்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டி எண் 06103 நெல்லை - சிமோகா டவுன் சிறப்பு ரயில், நெல்லையிலிருந்து செப். 7 முதல் அக். 26 வரையும், மறு மாா்க்கத்தில், வண்டி எண் 06104 சிமோகா - நெல்லை சிறப்பு ரயில் செப். 10 முதல் அக். 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது குறித்து, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகா்கள் ஆகியோரின் தொடா் கோரிக்கைகளை ஏற்று தென்காசி - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.