ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின...
ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு: 1,039 போ் பங்கேற்பு
தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வை 1,039 போ் எழுதினா்.
தேனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வை எழுதுவதற்கு மாவட்டத்தில் மொத்தம் 1,531 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 1,039 போ் (67.86 சதவீதம்) தோ்வு எழுதினா். 492 போ் தோ்வு எழுத வரவில்லை.