வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
பெரியகுளம் அருகே புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சின்னபெருமாள் (28). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதை இவரது மனைவி ஸ்ரீதேவி கண்டித்தாராம். ஆனால், சின்னபெருமாள் மது அருந்துவதை நிறுத்தவில்லையாம்.
இதன் காரணமாக ஸ்ரீதேவி அவரது தந்தையின் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னபெருமாள் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மற்றொருவா் தற்கொலை: பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சரவணன் (20). இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அந்தந்த பகுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.