செய்திகள் :

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமனம்!

post image

தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.

இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார்.

1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் பணியாற்றினார். 1997-ல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

1998 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளரனதும் மத்திய அரசின் உளவுப் பிரிவு பணிக்குச் சென்று, தமிழகம் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

2019ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாகப் பணிகளில் பணியாற்றினார்.

இதையும் படிக்க | காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

G. Venkatraman appointed as DGP in charge of Tamil Nadu!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க