செய்திகள் :

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க வரிகள் மற்றும் அந்நிய முதலீடு ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால் இந்திய ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் ஆனது முந்தைய அமர்வில் 88.3075 என்ற வாழ்நாள் குறைந்த அளவை எட்டியது. ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரூபாயை ஆதரிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், இந்திய ரூபாய் ரூ.88 என்ற நிலையில் இருந்தததாகவும், இது சந்தை வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.18 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.33 ஐ தொட்டது. முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ88.19ஆக முடிவடைந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளில் எந்தவித முன்னேற்றங்கள் இல்லை என்றால், ரூபாயின் நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும், இது மேலும் புதிய குறைந்த அளவுகளை தொடும் என்றார் கரூர் வைஸ்யா வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி ரெட்டி.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன... மேலும் பார்க்க

வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளு... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 1) காலை 79,828.99 என்ற புள்ளிகளில் தொடங... மேலும் பார்க்க

அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!

கொல்கத்தா: அமெரிக்கா விதித்த வரிகள் தொழில்துறையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

கடந்த ஜூன் காலாண்டின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க