செய்திகள் :

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' - நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

post image

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர்சித்தவர்களில் ஒருவர் கன்னட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா.

தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் சில சட்ட சிக்கல்களாலும் நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், நடிகை ரம்யாவுக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமான செய்திகளை அனுப்பியும், பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியிருக்கின்றனர்.

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

இது தொடர்பாக நடிகை ரம்யா ஜூலை 28 மாலை, பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங்கிடம் 43 சமூக வலைதள கணக்குகள் மீது புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், ``நடிகர் தர்ஷனின் வழக்கில் என் கருத்தில் அதிருப்தியடைந்த ரசிகர்கள், எனது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு பல்வேறு கணக்குகள் மூலம் இழிவான, அருவருப்பான மற்றும் மோசமான செய்திகளை அனுப்பியுள்ளனர்.

எனக்கு வந்த செய்திகள் மிகவும் அருவருப்பானவை. பெண் வெறுப்பு (misogynistic) நிறைந்தவை, அவற்றை என்னால் புகாரில் கூட மீண்டும் குறிப்பிட முடியவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரம்யா, ``பொது மக்களுக்கு நீதி குறித்த நம்பிக்கையை அளிப்பதற்காக, நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் செய்தியைப் பகிர்ந்தேன்.

அதன்பிறகு, இத்தகைய இணையத் தாக்குதல்கள் (trolling) தொடங்கியது. எதன் மூலமும் பெண்களை முடக்கிவிட முடியும் எனக் கருதுபவர்களுக்கு எதிராக இந்தப் புகாரை நான் அளித்துள்ளேன்.

43 சமூக வலைதள கணக்குகள் மீது புகார் அளித்துள்ளேன். அவர்களில் சிலர் என்னை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் மிரட்டினர்.

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

பொது சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கே இப்படியெல்லாம் நடந்தால், மற்றவர்களுக்கு என்ன நடக்கும்? பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றியுள்ளார். ஆண்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம் பெண்களுக்கும் உண்டு.

நடிகர் தர்ஷன் தனது ரசிகர்களிடம் இதுபோன்ற செய்திகளைப் பகிர வேண்டாம் என்று கேட்டிருக்க வேண்டும். பிரபலங்கள் மற்றும் பொது முகங்களாகிய நாம் சட்டத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இதற்கு முன்னதாக, சூப்பர் ஸ்டார்களான யாஷ் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரும் இணையத்தில் குறிவைக்கப்பட்டனர். அப்போதும் நான் இந்த விவகாரத்தை எழுப்பினேன்.

முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பெண்களின் பெயரில் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டனர்.

இந்த விவகாரத்தில் திரைத்துறையினரிடமிருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் பல பெண்கள் தங்கள் மரியாதை கெட்டுவிடும் என்ற பயத்தில் பேச அஞ்சுகின்றனர்" என்றார்.

நடிகை ரம்யாவின் புகாரைத் தொடர்ந்து ஆபாசமான செய்திகளை அனுப்பிய வழக்கில், காவல்துறை நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.

நடிகை ரம்யா
நடிகை ரம்யா

இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள்.

கைதானவர்கள் சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர், மேலும் பலர் தங்கள் பதிவுகளை நீக்கிய பிறகு பதுங்கியுள்ளனர்.

இருப்பினும், காவல்துறைக்கு போதுமான தகவல்கள் கிடைத்துள்ளன, அவர்களைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

நடிகை ரம்யாவை இலக்காகக் கொண்ட ஆபாசமான மற்றும் பெண் வெறுப்புத் தாக்குதல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, 'திரைத்துறையில் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பு' (FIRE) கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்க... மேலும் பார்க்க

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேறொரு பெண்ணை மணக்க கர்ப்பிணி காதலி எதிர்ப்பு; காதலன் கொடூரச் செயல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியைச் சேர்ந்தவர் துர்வாஸ் தர்சன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பக்தி மாயாகர் (26) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். திடீரென மாயாகர் காணாமல் போய்விட்டார்.அவர் என்ன ஆனார் என்று த... மேலும் பார்க்க

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந... மேலும் பார்க்க

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் ட... மேலும் பார்க்க