செய்திகள் :

"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்பஜன்

post image

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2008-ல், மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு 11 போட்டிகளில் ஆட ஹர்பஜன் தடைவிதிக்கப்பட்டார்.

மறுபக்கம், ஹர்பஜன் இன்று வரை பல இடங்களில், தான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்றும் அது முழுக்க முழுக்க தன்னுடைய தவறு என்றும் மன்னிப்பு கேட்டு வருகிறார்.

லலித் மோடி
லலித் மோடி

இவ்வாறு அந்த சம்பவத்தை இரு தரப்பினரும் கடந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீசாந்த்தை ஹர்பஜன் அறையும் வீடியோ 17 வருடங்களுக்குப் பிறகு இப்போது வெளியாகி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கின் `Beyond23 Cricket Podcast' என்ற நிகழ்ச்சியில் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி கலந்து கொண்டபோது இந்த வீடியோ அதில் ஒளிபரப்பட்டிருக்கிறது.

இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி, "லலித் மோடி, மைக்கேல் கிளார்க் இருவரும் வெட்கப்பட வேண்டும்.

உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள்.

ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்" என்று விமர்சித்தார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

இந்த நிலையில், இன்ஸ்டன்ட் பாலிவுட் ஊடகத்திடம் வீடியோ வெளியானது குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், "வீடியோ வெளியான விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது.

இதற்குப் பின்னால் அவர்கள் சுயநல நோக்கம் கொண்டிருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை மக்கள் மறந்துவிட்டார்கள்.

அதை மக்களுக்கு அவர்கள் நினைவூட்டுகிறார்கள். என்ன நடந்ததோ அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

இப்போது வீடியோ வைரலாகிவிட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

தவறு செய்துவிட்டேன் என பலமுறை நான் கூறிவிட்டேன். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், அதில் நானும் தவறு செய்துவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

Rahul Dravid: RR பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து திடீர் விலகல்; IPL-ல் ராகுல் டிராவிட் பாதை

இந்திய பிரீமியர் லீக்கில் (IPL)-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாற... மேலும் பார்க்க

``லலித் மோடி, மைக்கேல் க்ளார்க் இருவரையும் பார்க்க அருவருப்பா இருக்கு'' - ஸ்ரீசாந்த் மனைவி காட்டம்

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்திருந்தார்.... மேலும் பார்க்க

Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" - மனம் திறந்த முகமது ஷமி

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காய... மேலும் பார்க்க

"விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார்" - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2013 முதல் 2015 வரை நட்சத்திர பவுலராக ஜொலித்தவர் மோஹித் சர்மா.2015-க்குப் பிறகு பஞ்சாப், டெல்லி, மீண்டும் சென்னை என மாறி மாறி ஆடிய மோஹித், ஆரம்பத்தில் சென்னை அணியில் பந்த... மேலும் பார்க்க

MS Dhoni: "தோனியைக் கண்டு பிரமிக்க இதுவும் ஒரு காரணம்" - CSK முன்னாள் வீரர் அஸ்வின் ஷேரிங்ஸ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின், நேற்று (ஆகஸ்ட் 27), `சிறப்பான நாளில் சிறப்பான தொடக்கம்' என்று ட்வீட் செய்து ஐ.பி.எல்லில் இருந்தும் ஓய்வுபெற... மேலும் பார்க்க

Vijay Shankar: "தமிழ்நாடு அணியில் எனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு" - விஜய் சங்கரின் விளக்கம் என்ன?

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு இருப்பதே, வரவிருக்கும் (Domestic Season) உள்ளூர் தொடருக்காக திரிபுரா அணிக்கு மாறும் முடிவை எடுக்கக் காரணம் எனத் தமிழ்நாடு அணியின் முன்னாள் ... மேலும் பார்க்க