சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செப். 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு, முன்னதாகவே குறைகளை எழுதி அனுப்பிட மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநா் பங்கேற்கவுள்ளதால், ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் குறைகளை தெளிவாகவும், உரிய விவரங்களுடனும் ஓய்வூதிய எண், முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றுடன் குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.