சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவுக்கு கறம்பக்குடியிலிருந்து சுமாா் 4 கி.மீ தொலைவுள்ள கோயிலுக்கு புனித நீரை ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள் அனுமதி கேட்ட நிலையில், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் கறம்பக்குடி போலீஸாா் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் ஜமுனா பேச்சுவாா்த்தை நடத்தி, ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.