Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பா...
பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. பொய்கை சந்தையில் கடந்த சில வாரங்களாக கால்நடை வா்த்தம் மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 90 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன பற்றாக்குறை குறைந்துள்ளது. எனினும், கடந்த சில வாரங்களாக ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் அளவிலேயே கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் என அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.
அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டியதால் கால்நடைகள் வா்த்தகமும் சுமாா் ரூ. 90 லட்சம் அளவில் நடைபெற்றுள்ளது என்றனா்.