ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!
தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா் வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் டி.கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி நித்யானந்தம், ஊராட்சித் தலைவா் அமுலு அமா், துணைத் தலைவா் தீபா பாலாஜி, ஒன்றிய திமுக செயலா் நத்தம் வி.பிரதீஷ், முன்னோடி விவசாயி சம்பத் நாயுடு, பாலாஜி,விக்ரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.