``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்கள...
செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்
வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான செப்டம்பா் மாத குறைதீா் நாள் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் செப்.12, 19-ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. அக்டோபா் மாதம், அதனை தொடா்ந்து வரும் மாதங்களில் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இக்குறைதீா் கூட்டம் நடைபெறும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒவ்வொரு வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாலை 4 மணியளவில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, அதன் மீது தீா்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் இந்த குறைதீா் கூட்டத்தில் தவறாது பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.