செய்திகள் :

விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வரித்துறை விசாரணை

post image

சுஹானா கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கடற்கரையோரம் பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீடு இருக்கும் பகுதியில், ஷாருக் கான் மகள் சுஹானா கானும் இரண்டு நிலங்களை வாங்கி இருக்கிறார்.

அலிபாக்கில் உள்ள தால் என்ற கிராமத்தில் அஞ்சலி, ரேகா மற்றும் பிரியா ஆகிய சகோதரிகளிடமிருந்து சுஹானா கான் ஒரு நிலத்தை ரூ.12.91 கோடிக்கு வாங்கினார்.

ஷாருக் கான், சுஹானா கான்,

மூன்று சகோதரிகளுக்கும் அந்த நிலத்தை அவர்கள் பெற்றோர் கொடுத்திருந்தனர். அச்சகோதரிகளின் பெற்றோருக்கு அரசு அந்த நிலத்தை ஒதுக்கியிருந்தது.

விவசாய தேவைக்காக அந்த நிலத்தை ஒதுக்கியதாகவும், ஆனால் அதனை பண்ணை வீட்டிற்காக விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதோடு நிலத்தை வாங்கும்போது சுஹானா கான் தன்னை விவசாயி என்று கூறி ஆவணங்களை பதிவு செய்துள்ளார். இதனால் சுஹானா கான் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி அலிபாக் தாசில்தாரிடம் துணை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலம் விற்பனையில் விவசாய நிலச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் விவசாய நிலங்களை விவசாயிகள் மட்டுமே வாங்க முடியும். நிலம் வாங்குபவர்கள் தான் விவசாயி என்பதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்.

ஷாருக் கான் மகள் சுஹானா கான் தன்னை விவசாயி என்று கூறி 1.5 ஏக்கர் நிலத்தை 2023 ஆம் ஆண்டு வாங்கியிருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது.

விசாரணையின் இறுதியில் நில பதிவு அங்கீகரிக்கப்படுமா அல்லது பதிவு ரத்து செய்யப்படுமா என்பது தெரிய வரும்.

சுஹானா 2023 ஆம் ஆண்டு மற்றொரு நிலத்தை ரூ.10 கோடிக்கு வாங்கினார். ஷாருக் கான் குடும்பம் அலிபாக்கில் நிலம் வாங்கி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை கிடையாது.

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஷாருக் கானின் பண்ணை வீட்டுக்கும், ஷாருக் கானின் கம்பெனிக்கும் உள்ள தொடர்பு குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தியுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் 'தொழிலாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் ... மேலும் பார்க்க

ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? - கருவூல செயலாளரின் புள்ளிவிவரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த வரிகள் அமலுக்கு வந்துவிட்டன.இதனால், அமெரிக்காவிற்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்காவின் க... மேலும் பார்க்க

``ரூ.50 கோடியில் கட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்த பஸ் ஸ்டாண்ட் பயனில்லை'' -குமுறும் சோழவந்தான் மக்கள்

முதலமைச்சர் தொடங்கி வைத்தும், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வராமல் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

TVK: புதுச்சேரியில் புதிய கூட்டணியை அமைக்கிறாரா விஜய்? - தவெக விளக்கம்

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரியில் தவெக ஒரு புதிய கூட்டணியை அமைக... மேலும் பார்க்க

``அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி; புதின், கிம் ஜாங் வாழ்த்துகள்'' -கோபத்தில் ட்ரம்ப்: என்ன காரணம்?

இரண்டாம் உலகப் போர் முடிவின் 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சீனாவில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடந்தது.இந்த அணிவகுப்பை 26 உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர். இதில் மிக முக்கியமாக கவனிக... மேலும் பார்க்க

Mumbai: ``மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி'' - உண்ணாவிரதத்தை முடித்த மனோஜ் ஜராங்கே

மராத்தா இட ஒதுக்கீடுமும்பையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல், மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, மராத்தா சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர... மேலும் பார்க்க