அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
தெருநாய்கள் விவகாரம்: "என்னை அவர்களுக்கு ஆதரவாகப் பேசி வீடியோ போட சொன்னாங்க" - நடிகர் அருண்
தெருநாய் விவகாரத்தில் தீர்வுக்கு இன்னும் வழி தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் சில மாதங்களுக்கு முன் தானாகவே முன்வந்து சில நடவடிக்கைகளை எடுத்த போது இந்தியா முழுக்க உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விளைவு, தான் தந்த தீர்ப்பிலிருந்தே பின் வாங்கியது உச்ச நீதிமன்றம்.
தொடர்ந்து நாடெங்கும் நாய்க்கடி விவகாரம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தனியார்த் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் அவ்விவகாரம் விவாதிக்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில், தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய சிலருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. 'நாங்கள் பேசியது முழுதாக ஒளிபரப்பாகவில்லை' என அவர்களுக்குத் தொலைக்காட்சி மீது குற்றஞ்சாட்டினர்.
இந்தப் பின்னணியில் நடிகர் அருண் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அருணிடம் பேசினோம்.
''ஜனநாயகன் படத்துல நடிச்சிருக்கிறதால பொது விஷயத்துல எதுவும் கருத்துச் சொல்ல வேண்டாமேன்னு கொஞ்ச நாளா பேசாம இருந்தேன். ஆனா இந்தத் தெருநாய் விவகாரம் என்னைத் திரும்பவும் பேச வச்சிடுச்சு. அதுவும் போக என் சக ஆர்ட்டிஸ்டுகள் விஜய் டிவி நிகழ்ச்சியில பேசுன பேச்சு என்னையே கடுப்பாக்கிடுச்சு. பொதுமக்கள் நிச்சயம் கோபப்படத்தான் செய்வாங்க.
ஒரு மனுஷன் நாய் பிரச்னையால் தன் குழந்தையை இழந்துட்டு அழுதுட்டிருக்கார். அந்த இடத்துல போய் என்ன எப்படிப் பேசணும்னு தெரிஞ்சு பேச வேண்டாமா? நானும்தான் வீட்டுல நாய் வளர்க்கிறேன். அதுக்காக கண்ணை மூடிட்டுப் பேச முடியுமா? எதுக்குமே ஒரு எல்லை இருக்குங்க.

பேசிட்டு வந்து டிவியில எடிட் பண்ணிட்டாங்கனு புலம்பிட்டிருக்கிறதுல அர்த்தமில்லை.
டிவியில இருக்கிறவங்கள்ல நான் மட்டுமில்ல ஏகப்பட்ட பேர் வீட்டுல நாய் வளர்க்கிறோம். நாய்க்கு ஒண்ணுன்னா திரண்டு போராட ஒரு கேங்கே இருக்கு.. அவங்கள்ல முக்கால்வாசிப் பேர் இந்தத் தெரு நாய்க் கடி விவகாரத்துல எதையும் யோசிக்காம கண் மூடித்தனமான பேசிட்டிருக்காங்க.
அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் கூப்பிட்டாங்க. தீவிரமான நாய் லவ்வர்களான சிலர் எதையோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டதா கேள்விப்பட்டேன்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இப்ப மக்கள் கொந்தளிக்கவும், பேசினவங்க வேற வழி தெரியல. எதையாவது சொல்லி சமாளிச்சிட்டிருக்காங்க.
இப்ப கடைசியில என்னையும் அவர்களுக்கு ஆதரவா பேசி வீடியோ வெளியிடக் கேட்டாங்க. அதுக்குப் பிறகுதான் யதார்த்தத்தைப் பேசணும்னு நினைச்சேன்.
ரேபிஸ் பிரச்னை தீவிரமா போயிட்டிருக்கிற இந்தச் சமயத்துல நான் நாய்தான் முக்கியம்னு பேசிட்டிருந்தா சமூகம் என்னை மன்னிக்காதுங்க" என்கிறார் இவர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...