Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்...
Pugazh: "காதல் என்ற கடலில் மூழ்கினேன்" - மனைவி குறித்து நெகிழும் 'குக் வித் கோமாளி' புகழ்
'குக் வித் கோமாளி' டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது அவர் படங்களிலும் நடித்து வருகிறார்.
`கோலிசோடா' வெப் சீரிஸிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த பென்ஸியா என்பவரைக் காதலித்துக் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இன்று (செப்டம்பர் 1) அவர்களது திருமண நாளை முன்னிட்டு புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்!
நீ கடமை எனும் சிப்பிக்குள்! நானோ காதல் எனும் கடலுக்குள்... நீயும் விடுவதாயில்லை... நானும் எழுவதாயில்லை... Happy anniversary uyire" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...