எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது.
சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது.
உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு கண்டறிதல் படை மற்றும் மோப்ப நாய்களுடன் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்தனர்.
தொடர்ந்து சுங்க அலுவலகம் அருகே கவனிப்பாரற்று கிடந்த சிறிய உலோகப் பெட்டியை அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்தப் பெட்டி மேலும் சோதனைக்காக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.