செய்திகள் :

சினாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஜம்மு - காஷ்மீரில் முக்கிய அணைகளின் அனைத்து மதகுகளும் திறப்பு!

post image

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான சினாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராம்பன் மாவட்டத்தில் சினாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்லிஹார் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் கனமழையால் சினாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, ரியாசி மவட்டத்தில் அமைந்துள்ள சலால் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டிருப்பதால் சினாப் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு பாதிப்புகளைத் தொடர்ந்து வைஷ்ணவி தேவி யாத்திரை கடந்த ஆக. 27முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Baglihar Dam Gates Opened in Ramban After Heavy Rainfall on Chenab River

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி ப... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி: ரூ.1.86 லட்சம் கோடி வசூல்!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017... மேலும் பார்க்க

திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே

பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார். பி... மேலும் பார்க்க

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க