டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
மல்லி தொடரில் இணையும் சந்திரலேகா நடிகை!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் இணையவுள்ளார்.
சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நாகஸ்ரீ, தற்போது மல்லி தொடரில் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மல்லி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நிகிதா ராஜேஷ் நாயகியாகவும் விஜய் வெங்கடேசன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடரிக்கான ரசிகர்களைத் தக்கவைத்து வருகிறது.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களைக் கவர்ந்த சந்திரலேகா தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை நாகஸ்ரீ, மல்லி தொடரில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரலேகா தொடருக்குப் பிறகு இதயம் தொடரில் நடித்து கவனம் பெற்ற நாகஸ்ரீ, பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மல்லி தொடரில் இணைந்துள்ளார்.

மல்லி தொடரில் ரேணுகா என்ற பாத்திரத்தில் நாகஸ்ரீ நடிக்கவுள்ளதால், மல்லி தொடரில் மேலும் பல புதிய திருப்பங்களை உருவாக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்படும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லி தொடரில் இணைந்துள்ள நாகஸ்ரீக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!