டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
Janhvi Kapoor: "திருப்பதி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்யனும்"- ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஶ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
2018ம் ஆண்டு `Dhadak' திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி பாலிவுட்டில் பிஸியாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்துகொள்ளவதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசுபொருளாகியது.

தற்போது ஜான்வி கபூர் நடித்திருக்கும் 'param sundari' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையிருக்கிறது என்று பேசியிருந்தார் ஜான்வி கபூர்.
திருமண ஆசைகள் குறித்துப் பேசியிருக்கும் ஜான்வி, "திருப்பதி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க வேண்டும். திருமண முறை, குடும்ப அமைப்பு, குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கும்" என்று தனது தனிப்பட விருப்பங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...