தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?
உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் விநோதம் என்னவென்றால், அந்த காவலரின் மனைவியும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் பதவியில் இருப்பவர்; அதுபோல, அவருடன் இருந்த ஆண் நபரும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கணவனும் மனைவியும் வெவ்வேறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்ததால் அவர்கள் இருவரின் பணி நேரமும் மாறுதலுக்குட்பட்டதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 8 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீட்டை திறந்து பார்த்தபோது அங்கே அவரது மனைவி தனது நண்பர் அதாவது இன்னொரு காவலருடன் தனிமையில் இருந்துள்ளார்.
‘தனது கணவர் பணி நேரம் முடித்து வீட்டுக்கு வர தாமதமாகும்’ என்று கருதிய மனைவிக்கு கணவர் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியதால் சிக்கல் ஏற்பட்டு பிரச்சினை பூதககரமாக வெடித்துள்ளது.
இதையடுத்து, அவரது மனைவி தனது ஆண் நண்பருடன் இருந்த அறையின் கதவைப் பூட்டி உள்ளேயே இருந்துகொண்டு வெளியே வர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இப்பிரச்சினையால் ஏற்பட்ட அலறல் சத்தத்தில் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் சென்று அறையின் கதவைத் திறந்து மூவரையும் சமாதானப்படுத்திய போலீஸார், அதன்பின் கணவன் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கதவைத் திறந்ததும் அவர்கள் இருவரையும் கணவன் அடித்து தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினையை முழுக்க முழுக்க மேற்கண்ட மூவரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும், யாரும் அவசரப்பட்டு தலையிட வேண்டாமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனது வீட்டுக்குள், இன்னொரு போலீஸ் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த தனது போலீஸ் மனைவியை அவரது போலீஸ் கணவன் பூட்டி வைத்து தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.