"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்ப...
நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!
மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி 11 மாத காயத்துக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளார்.
கடந்த முறை பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி தான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த சீசனில் பேலந்தோர் விருது (தங்கப் பந்து) விருதை மிட்ஃபீல்டரான இவர் வாங்கியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
காயத்திலிருந்து மீண்டுவந்த ரோட்ரி
ஏசிஎல் காயத்தினால் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவர் வந்த முதல் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என கடைசி நேரத்தில் தோற்றது.
2023-24 சீசனில் 3 பிரீமியர் லீக் போட்டியில் மட்டுமே தோற்றிருந்தது. அந்தாண்டுக்கான தங்கப் பந்து விருதைதான் ரோட்ரி வென்றிருந்தார்.
தற்போது, ஆகஸ்ட் மாதத்தில் மான்செஸ்டர் சிட்டி 4 போட்டிகளில் 2 மட்டுமே வென்றுள்ளது.
நான் மெஸ்ஸி கிடையாது
இந்நிலையில், ரோட்ரி கூறியதாவது:
நான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது. நான் வந்ததும் அணியை மிகப்பெரிய சக்தியாக மாற்ற முடியாது.
அணியை என்னால் எல்லா போட்டிகளிலும் வெற்றியடைய செய்ய முடியாது. அது ஒரு கூட்டு முயற்சி. கடந்த காலங்களில் வென்றதற்கு அணி வீரர்களே காரணம்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே குணமாகி வந்திருக்கிறேன். சர்வதேச போட்டிகளுக்கான இடைவெளி முடிந்து வந்ததும் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன் என்றார்.